Saturday, December 21, 2013

நீங்கள் வாங்கும் மணல் சுத்தமானதா ?

Photo: நீங்கள் வாங்கும் மணல் சுத்தமானதா ?

பெருமணல் என்பது 4.75 மி.மீ. அளவுள்ளதாகும். இத்தகைய மணலை கான்கிரீட் வேலைக்கும், அஸ்திவாரப் பணிக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். சிறுமணல் என்பது 0.75 மி.மீ. அளவுள்ளதாகும். இவற்றை செங்கல் கட்டுமானப் பணிக்கும், பூச்சுவேலைக்கும் உரிய சல்லடை கொண்டு சலித்து பயன்படுத்தலாம். மேலும், மணலை பயன்படுத்துவதற்கு முன்பாக பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே அதை உபயோகிப்பது நன்மை பயக்கும்.

தரத்தை பரிசோதித்தல்
1. ஒரு சிட்டிகை மணலை எடுத்து நாவினால் சுவைத்துப் பார்த்து, அதன் சுவை உப்பு கரிக்காது இருக்கிறதா என்பதை உறுதி செய்து, உப்புக் கரிக்காத மணலையே பயன்படுத்த வேண்டும்.

2. மணலை ஒரு கண்ணாடிக் குடுவைக்குள் சிறிதளவு இட்டு, அதனுடன் தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். அந்த குடுவையை அசையாமல் 2 மணி நேரம் வைத்திருக்கவும்.
அதன் பின்பு பார்த்தால் குடுவையில் பெருமணல் அடிப்பாதியிலும், சிறுமணல் அதன் மேலும், வண்டல் மண் அதன் மேலும் மிகக் குறைந்த அளவும், அதற்கு மேல் தெளிந்த நீரும் இருக்க வேண்டும். வண்டல் மண் 7 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அதை உபயோகிப்பது கூடாது.

3. மணலை கொஞ்சம் எடுத்து, ஈரப்படுத்திய இரு கைகளுக்குள் வைத்து தேய்த்தால் எந்த பொருளும் கையுள் ஒட்டாது மணல் குத்திய தடம் இருந்தால் அது நல்ல மண்.

4. மணலை இறக்குவதற்கு முன்பு சோதித்தல் அவசியமாகும். மணல், பொதுவாக, குப்பை மண், களிமண், எண்ணெய் பிசுபிசுப்பு, இலைதழை மற்றும் தேவையில்லாத கடல் சங்கு போன்றவை இல்லாமல் இருக்க வேண்டும்.

5. மணல் அதன் நெருக்கத்தின் அளவைப் பொறுத்து மூன்று விதமாக பிரிக்கப்படுகிறது.

6. இதைத் தவிர பரிசோதனைக் கூடத்திலும் கொடுத்து, மண்ணின் தரத்தை பரிசோதித்துக் கொள்ளலாம்.

நீங்கள் வாங்கும் மணல் சுத்தமானதா ?

பெருமணல் என்பது 4.75 மி.மீ. அளவுள்ளதாகும். இத்தகைய மணலை கான்கிரீட் வேலைக்கும், அஸ்திவாரப் பணிக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். சிறுமணல் என்பது 0.75 மி.மீ. அளவுள்ளதாகும். இவற்றை செங்கல் கட்டுமானப் பணிக்கும்,பூச்சுவேலைக்கும் உரிய சல்லடை கொண்டு சலித்து பயன்படுத்தலாம். மேலும், மணலை பயன்படுத்துவதற்கு முன்பாக பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே அதை உபயோகிப்பது நன்மை பயக்கும்.

தரத்தை பரிசோதித்தல்

1. ஒரு சிட்டிகை மணலை எடுத்து நாவினால் சுவைத்துப் பார்த்து, அதன் சுவை உப்பு கரிக்காது இருக்கிறதா என்பதை உறுதி செய்து, உப்புக் கரிக்காத மணலையே பயன்படுத்த வேண்டும்.

2. மணலை ஒரு கண்ணாடிக் குடுவைக்குள் சிறிதளவு இட்டு, அதனுடன் தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். அந்த குடுவையை அசையாமல் 2 மணி நேரம் வைத்திருக்கவும்.
அதன் பின்பு பார்த்தால் குடுவையில் பெருமணல் அடிப்பாதியிலும், சிறுமணல் அதன் மேலும், வண்டல் மண் அதன் மேலும் மிகக் குறைந்த அளவும், அதற்கு மேல் தெளிந்த நீரும் இருக்க வேண்டும். வண்டல் மண் 7 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அதை உபயோகிப்பது கூடாது.

3. மணலை கொஞ்சம் எடுத்து, ஈரப்படுத்திய இரு கைகளுக்குள் வைத்து தேய்த்தால் எந்த பொருளும் கையுள் ஒட்டாது மணல் குத்திய தடம் இருந்தால் அது நல்ல மண்.

4. மணலை இறக்குவதற்கு முன்பு சோதித்தல் அவசியமாகும். மணல், பொதுவாக, குப்பை மண், களிமண், எண்ணெய் பிசுபிசுப்பு, இலைதழை மற்றும் தேவையில்லாத கடல் சங்கு போன்றவை இல்லாமல் இருக்க வேண்டும்.

5. மணல் அதன் நெருக்கத்தின் அளவைப் பொறுத்து மூன்று விதமாக பிரிக்கப்படுகிறது.

6. இதைத் தவிர பரிசோதனைக் கூடத்திலும் கொடுத்து, மண்ணின் தரத்தை பரிசோதித்துக் கொள்ளலாம்.

FB Account blocked? solutions here;

தங்களுடைய அலைபேசி எண் மூஞ்சி புக்கில் பதிவு செய்தால் ... எந்த விஷ கிருமியாலும் உங்க மூஞ்சி புக் அக்கௌன்ட் நீக்க படாது ...

அப்படி ஏதேனும் தடை வந்தால் .. 
அரசால் அங்கீகரிக்கப்பட்ட ... அல்லது கொடுக்கப்பட்ட உங்கள் முகம் இருக்கும் ஏதேனும் அடையாள அட்டையை இந்த ஈமெயில் ID க்கு முழு விவரத்துடன் அனுப்பவும் ... 2 முதல் 5 நாட்களுக்குள் உங்கள் மூஞ்சி புக் அக்கௌன்ட் தடை நீக்கம் செய்ய படும் ...
fake id களுக்கு இது பொருந்தாது ....

info@fb.com
appeals@fb.com
info+ytupw5t@fb.com
infosource@fb.com
appeals+yy61tab@fb.com

(விதிமுறைகளுக்கு உட்பட்டது ...)

சங்கு பூ வின் மருத்துவ குணங்கள்

சங்குப் பூவின் மருத்துவக் குணங்கள்
சங்குப் பூ கொடி எல்லா இடங்களிலும் வேலியோரங்களில் வளரக்கூடியது. இது கொடி வகையைச் சார்ந்த்து. இதன் பூக்கள் நீலநிறத்திலும் வெண்மை நிறத்திலும் காணப்படும். இதன் பூக்கள் சங்கு போல் இருப்பதால் சங்குப் பூ எனப் பெயர் வந்தது. இதற்கு காக்கணம் செடி, மாமூலி, காக்கட்டான் என்றும் வேறு உண்டு. நீல மலருடையதைக் கறுப்புக் காக்கணம் என்றும், வெள்ளைப் பூ உடையதை வெள்ளைக் காக்கணம் என்றும் வகைப்படுத்துவர்.

இதன் இலை, வேர் மற்றும் விதை முதலியவை மருத்துவ குணம் கொண்டவை. இது புளிப்புச்சுவை கொண்டதாக இருக்கும். இது சிறுநீர் பெருக்கும், குடற்பூச்சிகளை கொல்லும். தாது வெப்பு அகற்றும். வாந்தி, பேதி, தும்மல் ஆகியவற்றை குணப்படுத்தும்.

இரத்த குழாய் அடைப்பு நீங்கும்

அழகுக்காக வளர்க்கப்படும் சங்குப்பூக்கள், இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைக் குணமாக்கும். சங்குப்பூக்களை பறித்து தண்ணீரில் 24 மணி நேரம் ஊறவைத்து அந்த தண்ணீரை குடித்துவர இரத்தக்குழாயில் உள்ள அடைப்பு நீங்கும்.

சங்குப்பூ, வேர், திப்பிலி, விளாம்பிசின், ஆகியவை வகைக்கு 10 கிராம் எடுத்துக்கொண்டு 15 கிராம் சுக்குடன் நீர் விட்டு அரைக்க வேண்டும். சிறு சிறு மாத்திரைகளாக செய்து நிழலில் காயவைத்து பத்திரப்படுத்தவும். ஒரு மாத்திரை கொடுக்க நன்கு பேதியாகும். சிறுகுழந்தைகளுக்கு அரை மாத்திரை கொடுக்க வேண்டும்.

நெறிகட்டிகள் குணமாகும்

சங்குப்பூ, இலை, உப்பு சேர்த்து அரைத்து நெறிகட்டிகள் மீது பூச கட்டிகள் கரையும். குழந்தைகள் அடிக்கடி இருமலால் சிரமப்பட்டால் அவர்களுக்கு சங்குப்பூக்களை வதக்கி இடித்து சாறு பிழிந்து அச்சாறில் ஒரு சங்கு அளவு அல்லது குறைந்த அளவு பருக வேண்டும்.

நெறிக்கட்டிகள் வீங்கி இருக்கும் போது சங்குப்பூவின் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்துக் கலந்து அருந்தி வர வியர்வை நீங்கும்.

சங்குப்பூவின் இலைகளை சட்டியல் இட்டு இளவறுப்பாக வறுத்து நன்கு சூரணம் செய்து கொண்டு 2 மணிக்கு 1 தடவை 6 முறை சாப்பிடச் சுரம், தலைவலி ஆகியவை தீரும்.