Friday, February 21, 2014

வாய்புண் மருத்துவம்



கோடை காலம் என்றால் வெப்பம் அதிகமாவது மட்டுமில்லாமல் பல தொந்தரவுகளும் சேர்ந்தே தொற்றிக் கொள்கிறது. பெரும்பாலோனோருக்கு வாய்ப்புண் தொந்தரவு ஏற்படுவதும் இந்த கோடையில் தான். வாய்ப்புண் பல காரணங்களால் வருகிறது அவை ஜீரணக்கோளாறு, உடல்சூடு, மன அழுத்தம் போன்றவைகளினால் அதிக அளவில் வாய்ப்புண
் ஏற்படுகிறது. இதனால் பேசவும், உணவு உட்கொள்ளவும் சிரமம் ஏற்படுகிறது. வாய்ப்புண்ணுக்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிதாக குணப்படுத்தலாம் என்று நம் முன்னோர்கள் கண்டறிந்துள்ளனர். உங்களுக்கு வாய்ப்புண் இருந்தல் நீங்களும் நீங்களும் இவைகளை பாலோ பண்ணுங்க

மஞ்சள்

எந்த வகை நோய்களுக்கும் சரி அழகிற்கும் சரி முக்கிய பங்கு வகிப்பது மஞ்சள் தான். அனைத்துவகை புண்களையும் குணமாக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. காலையில் வெறும் வயிற்றில் சிறு துண்டு மஞ்சள் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப் புண் இருப்பின் குணமடையும். தொடர்ந்து சாப்பிடுவதால் நோய் தொற்று ஏற்படாது என்கின்றனர்.

நன்கு பழுத்த தக்காளியை கூழாக்கி அதை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளிக்கலாம் அல்லது வெறும் தக்காளியை நன்றாக மென்று சாப்பிடலாம்.

புதினா இலை

புதினா இலைச் சாற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் அப்ளை செய்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். எரிச்சல், வலி குணமாகும். எலுமிச்சை தோலை நன்கு அரைத்து வாய்ப்புண் உள்ள இடத்தில் பூசலாம் நிவாரணம் கிடைக்கும். நெல்லிக்காயை விதை நீக்கிவிட்டு பேஸ்ட் போல அரைக்கவும். அதை வாய்ப்புண் உள்ள இடத்தில் அப்ளை செய்ய வாய்ப்புண் குணமாகும்.

வெந்தைய இலை

வாய்ப்புண் ஏற்பட்டிருந்தால் தேங்காயை அரைத்து பால் எடுத்து ஒருநாளைக்கு மூன்று முறை கொப்பளிக்க வேண்டும். இதனால் வாய்ப்புண் சரியாகும். இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவைக்க வைத்து அதில் வெந்தய செடியின் இலைகளை போட்டு ஊறவைக்கவேண்டும். 10 நிமிடம் கழித்து வெந்தைய இலைகளை எடுத்து போட்டுவிட்டு அந்த தண்ணீரில் வாய்க்கொப்பளிக்க வேண்டும். தினசரி சாப்பிட்ட உடன் இதை செய்து வர வாய்ப்புண் குணமாகும்.

துளசி இலை

ஒரு சில துளசி இலைகளை பறித்து கழுவிய பின் வாயில் போட்டு நன்கு மெல்லவும். அதன் சாறு வாய்ப்புண் உள்ள பகுதிகளில் படவேண்டும். துளசி இலைகளை முழுவதுமாக மென்று அப்படி விழுங்கிவிடவேண்டும். சில நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்கலாம். வாய்ப்புண் எரிச்சல் குணமாகும்.

கொய்யா இலையை பறித்து மென்று சாற்றினை விழுங்கவேண்டும். தினசரி மூன்று முறை இதுபோல செய்ய சில தினங்களில் வாய்ப்புண் குணமாகும்.

துவர்ப்பு தன்மை கொண்ட வாழைப்பூ

துவர்ப்பு தன்மை கொண்ட வாழைப்பூ வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும். வாழைப்பூவை வேக வைத்து சூப் வைத்து குடிக்கலாம். இதனால் வாய்ப்புண் சரியாகும். வயிற்றில் ஜீரணக் கோளாறு ஏற்பட்டாலும் நிவாரணம் கிடைக்கும். வாழைப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிடலாம் இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும்.

வாய்ப்புண் இருப்பின் விரைவில் குணப்படுத்த விரும்பினால் பாட்டி வைத்தியத்தை கடைபிடியுங்கள்.

Treatment for skin tag/மரு வை போக்கும் மருத்துவம்






"மரு" (Skin Tag) உதிர...


இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது "மரு" [Skin Tag] ஆகும்.

இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம். அதற்கு அம்மான் பச்சரிசி செடி தேவை...


 

அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும். இதனை மரு மீது பூசவும்.

மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும்.

இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்.

USE YOUR PEN DRIVE AS YOUR SYSTEM RAM




USE YOUR PEN DRIVE AS YOUR SYSTEM RAM :
-----------------------------------------------------
1) First Insert the Pen Drive at least having an memory of 1GB ,( Preferably 4GB) in the Given USB port of the Computer

2) Wait for the Pen Drive Detection and see whether it is detected or not

3) After detection of Pen Drive, you should do the following things Carefully

4) Now go to My Computer and right click it, then go to the Properties

5) Now go to Advanced and then to the Performance settings

6) Now again Advanced, and go to Change

7) In the Change, select the pen drive which u inserted

8) Then click on the Custom size and " check the value of space available "

9) Please Enter the Same in the Initial and Maximum Columns also

10) Now your Pen drive space is used for the System Virtual Memory , Just Restart and enjoy the Faster and Furious PC.

Anti corruption department contact numbers for all districts in Tamilnadu