நீங்கள் வாங்கும் மணல் சுத்தமானதா ?
பெருமணல் என்பது 4.75 மி.மீ. அளவுள்ளதாகும். இத்தகைய மணலை கான்கிரீட் வேலைக்கும், அஸ்திவாரப் பணிக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். சிறுமணல் என்பது 0.75 மி.மீ. அளவுள்ளதாகும். இவற்றை செங்கல் கட்டுமானப் பணிக்கும்,பூச்சுவேலைக்கும் உரிய சல்லடை கொண்டு சலித்து பயன்படுத்தலாம். மேலும், மணலை பயன்படுத்துவதற்கு முன்பாக பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே அதை உபயோகிப்பது நன்மை பயக்கும்.
தரத்தை பரிசோதித்தல்
1. ஒரு சிட்டிகை மணலை எடுத்து நாவினால் சுவைத்துப் பார்த்து, அதன் சுவை உப்பு கரிக்காது இருக்கிறதா என்பதை உறுதி செய்து, உப்புக் கரிக்காத மணலையே பயன்படுத்த வேண்டும்.
2. மணலை ஒரு கண்ணாடிக் குடுவைக்குள் சிறிதளவு இட்டு, அதனுடன் தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்க வேண்டும். அந்த குடுவையை அசையாமல் 2 மணி நேரம் வைத்திருக்கவும்.
அதன் பின்பு பார்த்தால் குடுவையில் பெருமணல் அடிப்பாதியிலும், சிறுமணல் அதன் மேலும், வண்டல் மண் அதன் மேலும் மிகக் குறைந்த அளவும், அதற்கு மேல் தெளிந்த நீரும் இருக்க வேண்டும். வண்டல் மண் 7 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அதை உபயோகிப்பது கூடாது.
3. மணலை கொஞ்சம் எடுத்து, ஈரப்படுத்திய இரு கைகளுக்குள் வைத்து தேய்த்தால் எந்த பொருளும் கையுள் ஒட்டாது மணல் குத்திய தடம் இருந்தால் அது நல்ல மண்.
4. மணலை இறக்குவதற்கு முன்பு சோதித்தல் அவசியமாகும். மணல், பொதுவாக, குப்பை மண், களிமண், எண்ணெய் பிசுபிசுப்பு, இலைதழை மற்றும் தேவையில்லாத கடல் சங்கு போன்றவை இல்லாமல் இருக்க வேண்டும்.
5. மணல் அதன் நெருக்கத்தின் அளவைப் பொறுத்து மூன்று விதமாக பிரிக்கப்படுகிறது.
6. இதைத் தவிர பரிசோதனைக் கூடத்திலும் கொடுத்து, மண்ணின் தரத்தை பரிசோதித்துக் கொள்ளலாம்.