Sunday, July 29, 2012

விமான நிலையத்தில் Passport முறைகேடுகள்..



எச்சரிக்கை!!!


அனைவரும் கவனமாக இந்த கட்டுரையை படிக்கவும்.


நமது கடவுச்சீட்டின் (பாஸ்போர்ட்) பக்கங்களை 

கிழித்து எரியும் விமான நிலைய அதிகாரிகள்!.... 

கவனமாக இருக்கவும்!.



நீங்கள் பன்னாட்டு விமானத்தில் பயணம் செய்பவராக 

இருந்தால் பன்னாட்டு விமான நிலைய 

குடிபுகல்அதிகாரி (IMMIGRATION OFFICER) /சுங்க 

அதிகாரி (CUSTOMS OFFICER) /காவல்துறை அதிகாரி (POLICE OFFICER) மற்றும் 

விமான நிலைய ஊழியர் (AIRPORT STAFF) யாரிடம் உங்களது கடவுச்சீட்டை 

(பாஸ்போர்ட்டை) கொடுத்தாலும் மிக கவனமாக இருக்கவும் ஏனென்றால் 

இந்த ஊழியர்கள் உங்களது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்டை) மிகச் 

சுலபமாக திருத்தி உங்களை இதன் மூலம் அலைக்கழித்து பணம் பறிக்கும் 

வழியை கையாளுகின்றனர் இது அனைத்து பன்னாட்டு விமான 

நிலையத்திலும் கூட்டு சதியாக நடைபெற்று கொண்டிருக்கின்றது. 

விமான நிலையத்தில் பயணிகள் புறப்பாடு (DEPATURE) நேரத்தில், பயணி 

குடிபுகல் (IMMIGRATION OFFICER) அதிகாரியை கவனிக்காமல் இருக்கும் 

தருணத்தில் வெளியேற்றம் (EXIT) முத்திரை பதித்து இலாவகமாக உங்களது 

கடவுச்சீட்டின் ஒரு பக்கத்தை கிழித்து விட்டு அனுப்பிவிடுகின்றார். மேலும் 

பயணி குடிபுகல்/குடியேற்றல் மேசையைவிட்டு அகன்றதும் தனது 

கணினிமூலம் பயணியின் முழு விவரத்துடன் புகார் தெரிவித்து 

விடுகின்றார், இப்பொழுது இந்தியாவின் அனைத்து பன்னாட்டு விமான 

நிலையங்களிலும் குடிபுகல்/குடியேற்றல் அலுவலர் கணினியில் 

பயணிகளின் கடவுச்சீட்டின் என்னை தட்டினால் பயணிகளின் முழு விவரப் 

பட்டியல் கிடைக்கும் அதில் சிகப்பு கொடி அடையாளமிட்டு மிளிரும். 

இதுபோன்று பயணிகளிடம் பணம் பறிக்கும் உத்தியை கையாளுகின்றனர்.

அந்த பயணி மீண்டும் வருகைத் தரும்போது விசாரணைக்கு 

உட்படுத்தப்படுவார்.

அந்த பயணி வெளிநாட்டில் எத்தனை ஆண்டு வேலைசெய்தார், அவரது 

வருமானம், அவர் செய்யும் வேலை போன்றவைகள் விசாரிக்கப்படும், 

இதில் சட்டம் பேசும் அப்பாவிகள் , இந்தியாவில் உண்மையான நீதி 

கிடைக்கும் என நம்பும் அப்பாவிகள் நிலைதான் பரிதாபம் அவரின் 

எதிர்காலம் பாழ்படுத்தப்படும். இதற்காக அவரிடம் குடிபுகல் அதிகாரிகளும், 

காவலர்களும் பேரம் பேசி பணத்தை கறந்துவிடுவார்கள்.

தயவு செய்து அனைவருக்கும் அறிவுறுத்துவது என்னவென்றால், நீங்கள் 

உங்களது கடவுச்சீட்டை விமான நிலைய குடிபுகல்/ சுங்கம் மேசையில் 

உள்ள அலுவலரிடம் கொடுக்கும்போது மிகவும் விழிப்புடன் இருங்கள், 

உங்களது பார்வையை திசைத்திருப்பும் நோக்கத்தில் அந்த அலுவலர் நடந்து 

கொண்டாலும் உங்களது பார்வையை தவறவிடாதீர்கள்.

மேலும் இந்த தகவலை உங்களுக்கு தெரிந்த நண்பர்கள், 

பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகளிடம் தெரிவியுங்கள். இதுபோன்று 

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் 20 - 30 சம்பவங்கள் அனைத்து 

பன்னாட்டு விமான நிலையங்களிலும் நடைபெற்று கொண்டிருக்கின்றன. 

உதாரணத்திற்கு ஒன்று, சில மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியா ஜித்தா 

(சவுதி அராம்கோ) வில் வேலைபார்க்கக் கூடிய ஹைதராபாத் சகோ. 

ஆரிபுதீன் தனது குடும்பம்பத்தினர் ஆறு உறுப்பினர்களுடன் அமெரிக்கா 

செல்ல விசா கிடைத்து நமது நாட்டின் ஹைதராபாத் வழியாக செல்ல 

எண்ணி ஹைதராபாத் விமான நிலையம் வந்தடைந்து, ஒருமாத காலம் 

தங்கிவிட்டு மீண்டும் ஹைதராபாத் விமான நிலையம் வழியாக அமேரிக்கா 

சென்றிருக்கின்றார். அவர் அமெரிக்காவை அடைந்து குடிபுகல் 

செய்யும்போது அவர் மனைவியின் கடவுச்சீட்டில் அமெரிக்காவிற்கான 

விசா பக்கம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அங்கிருந்து 

அவர்கள் அனைவரும் திருப்பிவிடப்பட்டனர். அவர்கள் மும்பை 

வந்தடைந்தவுடன் மும்பை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர், 

கடந்த இரண்டு மாதகாலமாக கோர்ட்டுக்கும், காவல் நிலையத்திற்கும், 

குடிபுகல் அலுவலகத்திற்கும் அலைந்துகொண்டிருக்கின்றனர். 

நினைத்துப்பார்க்கவே ஆச்சரியமாக இருக்கின்றது எவ்வாறெல்லாம் 

குடிபுகல் அதிகாரிகள் பணம் பறிப்பதற்காக தன தாய்நாட்டு மக்களின் 

வாழ்க்கையில் விளையாடுகின்றார்கள் என்பது.


பாம்பே மற்றும் ஹைதராபாத் பன்னாட்டு விமான நிலையத்தின் மூலம் 

பயணிக்கும் அனைத்து பயணிகளும் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். 

ஒவ்வொரு மாதமும் ௨௦-௩௦ இதுபோன்ற பாஸ்போர்ட்டின் நடு பக்கங்கள் 

கிழிக்கப்படும் நிகழ்வுகள் மேற்கூறிய விமான நிலையங்களில் 

நடைபெறுவதாகவும், இதில் சிலருக்கு இந்த சம்பவம் யாரால், எப்பொழுது 

நடைபெற்றது என்பதே கூட தெரிவதில்லை. இதுபோன்ற 

அசம்பாவிதங்களில் நாம் இருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை 

செய்துபாருங்கள், நமது நாட்டின் காவல்நிளையங்களும், 

வழக்கடுமன்றங்களும் நம்மை அலைகளிப்பர்கள் என்பதை. இதுபோன்ற 

சம்பவங்கள் இரண்டு மூன்று வருடங்களாகவே 

அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றது. யார் இதுபோன்ற கடவுச்சீட்டு 

வைத்திருக்கின்றார்களோ அவர்கள் விமான நிலையத்தை அடைந்தவுடன் 

அவர்களிடம் விசாரணை என்னும் ரீதியில் அவர்களை அளயவிடுகின்றனர், 

இதுபோன்ற சம்பவங்களை செய்வது சில குடிபுகல் அதிகாரிகள்தான் 

என்பதும் தெரியவந்துள்ளது.


ஆகையால் நாம் அனைவரும் மிகவும் கவனமாக நமது கடவுச்சீட்டை 

சரிபார்த்துவிட்டு குடிபுகல் மேசையிலிருந்து அகலவேண்டும் என்பதை 

கவனத்தில் கொண்டு இந்த செய்தியை நாம் அனைவருக்கும் 

தெரியப்படுத்தவேண்டும்.


ATM தகவல்...


ஒல்லியானவர்கள் கவனிக்கவும்....


ஒல்லியாக இருப்பவர்கள் குண்டாக சில வழிமுறைகள் பற்றிய தகவல்.



பரம்பரையாகச் சிலர் ஒல்லியாக இருப்பார்கள். இன்னும் சிலர் எவ்வளவு 


சாப்பிட்டாலும் அப்படியே ஒல்லியாக இருப்பார்கள்! இவர்கள் தங்களுக்கு 


மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, நீரிழிவு, தூக்கமின்மை, தாம்பத்தியக் 


கோளாறு, கல்லீரல் கோளாறு, குடல் கோளாறு முதலியவை உள்ளனவா 


என்பதைப் பரிசோதிக்க வேண்டும்.

ஏனெனில் மேற்கண்ட காரணங்களாலும் சிலர் தொடர்ந்து ஒல்லியாக 


இருப்பார்கள்.

இவர்கள் அனைவருமே ஆரோக்கியமான உடல் நலத்தைப் பெற்று சற்றுப் 


பூசினாற்போல குண்டாக மாற வாய்ப்பு உள்ளது. உடலைச் கொழுக்க 


வைப்பதிலும் எடையை அதிகரிப்பதிலும் பால், சோயாபால், அத்திப்பழம் 


போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.


முதலில் பால் வைத்தியத்தைப் பின்பற்றலாம். காலை முதல் இரண்டு மணி 


நேரத்திற்கு ஒரு கப் பால் வீதம் அருந்த வேண்டும். இது இரவு எட்டு மணி 


வரை தொடர வேண்டும். அடுத்த நாளும் காலை எட்டு மணிக்கு இந்தப் பால் 


வைத்தியத்தை ஆரம்பிக்க வேண்டும். வேறு எதுவும் சாப்பிடக் கூடாது.





பாலை லேசாகக் சுட வைத்தால் போதும். சர்க்கரை வேண்டாம். 


மூன்றாவது நாள் முதல் மணி நேரத்திற்கு ஒரு கப் வீதம் அருந்த 

வேண்டும். இதை மூன்று நாட்கள் தொடர வேண்டும். சிலருக்கு இந்த 


முறையில் தொடர்ந்து பால் சாப்பிடுவது திகட்டும். இவர்கள் அளவைக் 


குறைத்துக் கொள்ளலாம். ஸ்டிரா மூலம் கொஞ்சம் கொஞ்சமாகப் பாலை 


உறிஞ்சலாம். பசும் பாலுக்குப் பதிலாக சோயா பாலையும் பயன்படுத்தாம். 


ஆறு நாட்களுக்குப் பிறகு பாலும் அத்திப்பழமும் கலந்து மூன்று வேளையும் 


சாப்பிட ஆரம்பியுங்கள். நீங்கள் சதை போடுவதை உணர முடியும்

மாற்று முறை:


வைட்டமின்களும், தாது உப்புக்களும் சரியாக உணவில் இடம் பெற்றால், 


பஞ்சாபியர்களைப் போல வாட்டசாட்டமாக வளர முடியும். கால்சியம் 


அதிகமுள்ள பால், தயிர், மக்னீஷியம் அதிகம் உள்ள முள்ளங்கி, பீட்ரூட் 


வைட்டமின் டி (D) அதிகமுள்ள பால், மீன், எண்ணெய் முதலியவற்றை 


நன்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். புரதம் அதிகம் உள்ள 


'சோயாபீன்ஸையும் உணவில் சேர்க்க வேண்டும்.

ஒல்லியானவர்கள் சாப்பிடும் உணவு வகைகளில் எண்பது சதவிகிதம் 


திரவமாகவும், மீதி திட உணவாகவும் இருக்க வேண்டும். இதுவே உடல் 


எடை சரிவிகிதத்தில் அதிகரிக்க உதவும். உணவில் உள்ள 


வைட்டமின்கைளுயம், தாது உப்புக்களையும் நன்கு உறிஞ்சிக் கொண்டு, 


கழிவுகளையும் தாமதமின்றி வெளிேற்ற பி வைட்டமின்கள் அவசியம் 


தேவை திட உணவான கைக்குத்தல் அரிசி, கம்பு, கேழ்வரகு, பருப்பு, 


கடலை முதலியவற்றில் "பி" வைட்டமின்கள் அதிகம் உள்ளன.

தாவர எண்ணெய் வகைகளில் வைட்டமின் 'ஈ' உள்ளது. இவற்றில் 


சமைத்தால் உடல் எடை அதிகரிக்கும்.

டர்னிப், கீரை, பசலைக்கீரை, முள்ளங்கி, பீட்ரூட், காரட் முதலியவற்றை 


காய்கறி சாலட் போல் சாப்பிட வேண்டும். பச்சையாகச் சாப்பிட 


முடியாதவர்கள் லேசாக வேக வைத்துச் சாப்பிடலாம். குண்டாக மாற 


விரும்புகிறவர்கள் கர்பபி, தேநீர், புகைப்பழக்கம் முதலியவற்றை உடனே 


நிறுத்த வேண்டும்.

மூன்று வேளை உணவை ஆறு வேளையாகப் பிரித்து வைத்துக் கொண்டு 


கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டால் போதும். குண்டாக 


விரும்புகிறவர்கள் எப்போதும் சாப்பிடுவதைவிடக் கூடுதலாக 500 கலோரி 


மட்டும் சாப்பிட்டால் போதும். இதனால் வாரத்துக்கு 650 கிராம் வீதம் உடல் 


எடை அதிகரித்து வரும்.

சோயா மாவில் பூரி, சப்பாத்தி செய்து சாப்பிடுவது உடல் எடையை 


அதிகரிக்க உதவும். நோஞ்சான் குழந்தைகளுக்குக் குறைந்த விலையில் 


கிடைக்கும் உயர்ந்த சத்துணவு இது. சோயா மாவில் செய்யப்பட்ட முறுக்கு, 


பக்கோடா முதலியவை நல்ல நொறுக்குத் தீனிகள்.

ஒல்லியானவர்களும் குழந்தைகளும், பெரியவர்களும் இந்த நொறுக்குத் 


தீனியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நன்கு வளர்ந்து 


குண்டாகிவிடுவார்கள்.