Tuesday, August 7, 2012

என்ன பாவம் செய்தேன்?- குருவிகள்: இந்தியா தான் முதலிடம் சிட்டுகுருவிகளை சுட்டு தள்ளுவதில் செல்போன் மூலமாக...


இரண்டாம் உலகபோரின்போது அதிகஅளவில் ரேடாரின்முலம் தகவல் பரிமாற்றம் நடந்தது 
அப்போது ரேடார்ஆன்டனாவின்மீது பல பறவைகள் தாறுமாறான வேகத்தில் மோதி இறந்து வீழ்ந்தன ரேடார்கள் இயங்காதபோது பறவைகள் ஆன்டனாவில் மோதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இறந்த பறவைகள் கருகிபோய்இருந்தன அவை மைக்ரோவேவ் அடுப்பினுள் வைத்து கருக்கியதற்கு ஒப்பாக இருந்தன

இதற்கு காரணம் என்ன

பறவைகள் புவியில் உள்ள மிக்குறைந்த அளவுள்ள காந்த புலத்தினை பயன்படுத்தி தம் இருப்பிடத்தையும் தாம் பறக்கவேண்டிய திசையையும் அறிந்துகொள்கின்றன

ஆன்டனா மற்றும் செல்போன் கோபுரங்களில் வெளிப்படும் சக்திவாய்ந்த மின்காந்த கதிர்வீச்சுக்கள் பறவைகளை கடுமையான குழப்பத்தில் ஆழ்த்துகின்றன

மின்காந்த அலைகள் பறவைகளை மட்டுமல்ல மனிதனை இரண்டுவகையில் பாதிக்கிறது

1,மின்காந்த அலைகளின் ஆற்றல் மனிதஉடல்தசைகளின் வெப்பத்தை அதிகரிக்கச்செய்கிறது இதனால் உணர்வுமிக்க மூளை போன்ற உறுப்புகளின் வெப்பநிலை மிக்குறைந்த அளவு உயர்ந்தாலும் மூளையின் செயல்பாடுகளில் மாற்றம் அதிகஅளவில் ஏற்படுகிறது

2,மின்காந்த அலையில் உள்ள மின்காந்தபுலங்கள் நம் உடலின் முக்கிய உறுப்புகளான மூளை மற்றும் இதயத்தில் உள்ள மிகசிறிய அளவு மின் இயக்கத்தை அதிகஅளவு பாதிக்கச்செய்கின்றன

பாதுகாப்பு காரணங்களுக்காக செல்போன் கோபுரங்களில் வெளிப்படுத்தப்படும் கதிர்வீச்சின் அளவை கட்டுப்படுத்த சர்வதேச தொலைத்தொடர்பு ஆணையம் ஒரு வரைமுறையை வகுத்த்து என்றாலும் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான கோட்பாட்டை கடைபிடிக்கின்றன

ஆஸ்திரியா 0.001 வாட்ஸ்/சதுரமீட்டர்

ஸ்விட்சர்லாந்து 0.095 வாட்ஸ்/சதுரமீட்டர்

நியுசிலாந்து 0.5 வாட்ஸ்/சதுரமீட்டர்

பெல்ஜியம் 1.2 வாட்ஸ்/சதுரமீட்டர்

ஆஸ்திரேலியா 2 வாட்ஸ்/சதுரமீட்டர்

கனடா 3 வாட்ஸ்/சதுரமீட்டர்

இந்தியா 9.2 வாட்ஸ்/சதுரமீட்டர்

இந்தியா தான் முதலிடம் சிட்டுகுருவிகளை சுட்டு தள்ளுவதில் செல்போன் மூலமாக...

Sunday, August 5, 2012

ஆமைகள் பயணிக்கும் உலகின் தமிழ் கடல் நகரங்கள்



பழந்தமிழரின் கடல் மேலாண்மை” 

சமீபத்தில் நான் தெரிந்து கொண்ட தமிழர்களின் அறியப்படாத வரலாற்று ஆய்வை உங்களுடன் பகிர்கிறேன். 16.11.2011 அன்று வெளியான “டைம்ஸ்ஆப் இந்தியா” நாளிதளில் வந்த ஒரு செய்தியும் அதை தொடர்ந்து நான் கலந்துகொண்ட “பழந்தமிழரி
ன் கடல் மேலாண்மை” என்னும் கருத்தாய்வு கூட்டத்திலும் நான் தெரிந்து கொண்ட விஷயங்களையே நான் பகிர்கிறேன்.

தமிழர்களின் கடல் மேலாண்மை பற்றி ‘கடல் புறா’ போன்ற வரலாற்று நாவல்கள் மூலம் அரசல் புரசல்களாக நம்மில் பலரும் அறிந்திருப்போம். ’கலிங்கா பாலு’ என்னும்கடல்சார் ஆராய்ச்சியாளரின் கடல் ஆமைகள் பற்றிய ஆய்வில் தமிழர்கள் பற்றிய பல அறிய உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

அவருடைய ஆய்வறிக்கை “தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்” நடத்திய“பழந்தமிழரின் கடல் மேலாண்மை” கருத்தாய்வு கூட்டத்தில் விளக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையின் சாராம்சம் பின்வருமாறு-

கடல் வாழ் உயிரனமான ஆமைகள் கூட்டம் கூட்டமாக முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக வருடா வருடம் பல்லாயிரம் மையில்கள் கடந்து தமிழகம் மற்றும் ஒடிசா மாநில கடற்கரைகளில் தஞ்சம் புகுவது பலர் அறிந்த விஷயம். இந்த ஆமைகள் பற்றிய ஆய்வில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரிய வந்திருக்கிறது. சராசரியாக ஒரு கடல் ஆமையால் ஒரு நாளைக்கு 85கி.மி தூரமே நீந்தி கடக்க முடியும் ஆனால் இவ்வாமைகள் கடந்து வந்ததோ பல்லாயிரம் மையில்கள்! அதுவும் குறுகிய காலத்தில்!! எவ்வாறு என்று சில புதிய தொழில் நுட்பங்களின்(RFID-செயர்கைக்கோள் சாதனம்) RFIDஉதவியுடன் ஆராய்ந்த போது ஆமைகள் Ocean currents எனப்படும் கடலில் பாயும் நீரோட்டங்களின் உதவியுடன் பல்லாயிரம்கிலோ மீட்டர் நீந்தாமல் மிதந்து கொண்டு பயணிக்கும் விஷயம் தெரிய வந்திருக்கிறது. இப்படி பயணம் செய்யும் ஆமைகளை செயர்கைகோளின் மூலம் பின்தொடர்ந்த போது மியான்மர்(பர்மா), மலேசியா, இந்தோனேசியா,ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள், ரஷ்யா, மெக்சிகோ, ஐஸ்லேண்ட், ஆப்ரிக்கா என பல உலக நாடுகளின் கடற்கரைகளுக்கு ஆராய்ச்சியாளர்களை இட்டு சென்றுள்ளன. அப்படி அவை கடந்த கடற்கரைகளை ஆராய்ந்த கலிங்க பாலுவிற்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்த்து. ஆமைகள் தொட்டுச் சென்ற பல கடற்கரைகளில் துறைமுகங்களும் அவற்றில் 53 இடங்களின்பெயர்களும், அதன் மக்களும், பண்பாடும், மொழியும் ஏதாவது ஒரு வகையில் தமிழின் தாக்கத்தோடு இருந்திருக்கிறது. அந்த கடற்கரைகளில் உள்ள ஊர்கள் சிலவற்றின் பெயர்கள் உங்கள் பார்வைக்கு:

ஊர் பெயர்களும் அந்த நாடுகளும்:
தமிழா- மியான்மர்
சபா சந்தகன் – மலேசியா
கூழன், சோழவன், ஊரு, வான்கரை, ஓட்டன்கரை, குமரா- ஆஸ்திரேலியா
கடாலன் – ஸ்பெயின்
நான்மாடல், குமரி,- பசிபிக் கடல்
சோழா, தமிழி பாஸ் – மெக்சிகோ
திங் வெளிர்- ஐஸ்லாந்து
கோமுட்டி- ஆப்ரிக்கா
இப்படி அந்த ஆமைகள் சென்ற கடற்கரை நகரங்களின் பெயர்களும் ஒரு சில பகுதிகளில் வசிக்கும்பழங்குடியினத்தினரின் மொழி, பண்பாடு ஆகியன தமிழோடு தொடர்புள்ளதாக இன்றளவும் இருக்கின்றன.

இன்னொரு சுவாரஸ்யிமானவிஷயம். ‘சர்க்கரை வள்ளிக்கிழங்கு’(sweet potato) என்பது தமிழ் நாட்டில் விளையும் கிழங்கு வகை. நம் மீனவர்கள் கடலோடும்போது பல நாள் பசி தாங்க இவற்றையே உணவாக கொள்ளும் வழக்கம் இன்றளவும் உள்ளது. இதே வழக்கத்தைதமிழுடன் தொடர்புடையதாக கருதப்படும் பல பழங்குடியின மக்கள் பின்பற்றுகின்றனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் மியானமர், இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவின் சில பகுதி என பல இடங்களில்நம் சர்க்கரை வள்ளிக்கிழங்கின் பெயர் ‘குமரா’!! பிசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவில் வாழும் ஒரு குறிப்பிட்ட இனமக்கள் உபயோகப்படுத்தும் படகின் பெயர் ‘திரி மரம்’. அதில் உள்ள நடு பாகத்தின் பெயர் ‘அம்மா’ வலது பாகம் ‘அக்கா’ இடது பாகம் ‘வக்கா’. அடி பாகம் ‘கீழ்’.

Tamil bell Found in New Zealand
நியுசிலாந்து பகுதியில் 1836ஆம் வருடம் ஒரு பழங்குடியினர் குடியிருப்பில் தமிழ்எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட இரும்பாலான மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல் விக்கிபிடியாவில் உள்ளது. அதை படிக்கhttp://en.wikipedia.org/wiki/Tamil_bell சொடுக்கவும்.

இப்படி தமிழுடன் தொடர்புடைய பல விஷயங்களை விஷயங்களை மேலும் பல வருடங்கள் ஆராய்ந்த கலிங்க பாலு அவர்களின் ஆராய்ச்சி முடிவில் பழந்தமிழர்கள் தம்முடைய கடல் பயணங்களுக்கும் படையெடுப்புகளுக்கும் ஆமைகளை வழிகாட்டிகளாக (Navigators) பயன்படுத்தி பல்லாயிரம் மைல்கள் கடந்து பல நாடுகளில் கோளோச்சிருப்பது ஆதாரப் பூரவமாக நிரூபனமாகியிருக்கிறது.



நன்றி:வினோதன்

தமிழ் பாட்டில் சொல்லப்பட்ட 99 பூக்கள்



கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் கூறப்பட்டுள்ள 99 பூக்கள் இங்கே:

வள் இதழ் ஒண் செங் காந்தள், ஆம்பல், அனிச்சம், தண் கயக் குவளை, 

குறிஞ்சி, வெட்சி, செங் கொடுவேரி, தேமா, மணிச்சிகை, உரிது நாறு அவிழ் 

தொத்து உந்தூழ், கூவிளம், எரி புரை எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், 

வாகை, வான் பூங் குடசம், எருவை, செருவிளை, மணிப் பூங் கருவிளை, 

பயினி, வானி, பல் இணர்க் குரவம், பசும்பிடி, வகுளம், பல் இணர்க் காயா, 

விரி மலரஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங் கண்ணி, 

குருகிலை, மருதம், விரி பூங் கோங்கம், போங்கம், திலகம், தேங் கமழ் 

பாதிரி, செருந்தி, அதிரல், பெருந் தண் சண்பகம், கரந்தை, குளவி, கடி கமழ் 

கலி மா, தில்லை, பாலை, கல் இவர் முல்லை, குல்லை, பிடவம், 

சிறுமாரோடம், வாழை, வள்ளி, நீள் நறு நெய்தல், தாழை, தளவம், முள் தாள் 

தாமரை, ஞாழல், மௌவல், நறுந் தண் கொகுடி, சேடல், செம்மல், 

சிறுசெங்குரலி, கோடல், கைதை, கொங்கு முதிர் நறு வழை, காஞ்சி, மணிக் 

குலைக் கள் கமழ் நெய்தல், பாங்கர், மராஅம், பல் பூந் தணக்கம், ஈங்கை, 

இலவம், தூங்கு இணர்க் கொன்றை, அடும்பு, அமர் ஆத்தி, நெடுங் கொடி 

அவரை, பகன்றை, பலாசம், பல் பூம் பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், 

தும்பை, துழாஅய், சுடர்ப் பூந் தோன்றி, நந்தி, நறவம், நறும் புன்னாகம், பாரம், 

பீரம், பைங் குருக்கத்தி, ஆரம், காழ்வை, கடி இரும் புன்னை, நரந்தம், நாகம், 

நள்ளிருள் நாறி, மா இருங் குருந்தும், வேங்கையும், பிறவும், அரக்கு 

விரித்தன்ன பரு ஏர்அம் புழகுடன்

 கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்...


1. காந்தள் 2. ஆம்பல் 3. அனிச்சம் 4. குவளை 5. குறிஞ்சி 6. வெட்சி 7. செங்கொடுவேரி 8. தேமா (தேமாம்பூ) 9. மணிச்சிகை 10. உந்தூழ் 11. கூவிளம் 12. எறுழ் ( எறுழம்பூ) 13. சுள்ளி 14. கூவிரம் 15. வடவனம் 16. வாகை 17. குடசம் 18. எருவை 19. செருவிளை 20. கருவிளம் 21. பயினி 22.வானி 23. குரவம் 24. பசும்பிடி 25. வகுளம் 26. காயா 27. ஆவிரை 28. வேரல் 29. சூரல் 30.சிறுபூளை 31. குறுநறுங்கண்ணி 32. குருகிலை 33. மருதம் 34.கோங்கம் 35. போங்கம் 36.திலகம் 37. பாதிரி 38. செருந்தி 39. அதிரல் 40. சண்பகம் 41. கரந்தை 42. குளவி 43. மாமரம் மாம்பூ) 44. தில்லை 45. பாலை 46. முல்லை 47. கஞ்சங்குல்லை 48. பிடவம் 49. செங்கருங்காலி

50. வாழை 51. வள்ளி 52. நெய்தல் 53. தாழை 54. தளவம் 55. தாமரை 56. ஞாழல் 57. மௌவல் 58. கொகுடி 59. சேடல் 60. செம்மல் 61. சிறுசெங்குரலி 62. கோடல் 63. கைதை 64. வழை 65.காஞ்சி 66. கருங்குவளை (மணிக் குலை) 67. பாங்கர் 68. மரவம் 69. தணக்கம் 70. ஈங்கை 71.இலவம் 72. கொன்றை 73. அடும்பு 74. ஆத்தி 75. அவரை 76. பகன்றை 77. பலாசம் 78. பிண்டி
79. வஞ்சி 80. பித்திகம் 81. சிந்துவாரம் 82. தும்பை 83. துழாய் 84. தோன்றி 85. நந்தி 86. நறவம்
87. புன்னாகம் 88. பாரம் 89. பீரம் 90. குருக்கத்தி 91. ஆரம் 92. காழ்வை 93. புன்னை 94. நரந்தம்
95. நாகப்பூ 96. நள்ளிருணாறி 97. குருந்தம் 98. வேங்கை 99. புழகு